ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் "சர்வதேச குறைமாத குழந்தைகள்" தினம் கடைபிடிப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் "சர்வதேச குறைமாத குழந்தைகள்" தினம் மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. 

இவ்விழாவிற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் குறைபிரசவத்தில் பிறந்து தற்போது நலமுடன் இருக்கும் பல குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். மதுரை, திருச்சி, ஈரோடு போன்ற மாவட்டங்களிருந்தும் பலர் விழாவிற்காக வந்திருந்தனர். 

இவ்விழாவிற்கு மருத்துவக் குழு தலைவரான டாக்டர். சுகுமாரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், 25 வருடங்களுக்கு முன்னர் இம்மருத்துவமனையில் தொடங்கப்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கான பிரிவு தற்போது 40 இளங்குழந்தைகளை அனுமதிக்கும் வசதியுடன், உயர் அழுத்த செயற்கை சுவாச கருவிகள், சிபாப், போக்குவரத்து இன்குபேட்டர், 2 தேர்ச்சிபெற்ற சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என வளர்ந்திருப்பது குறித்து சிறப்புரையாற்றினார்.



பச்சிளங்குழந்தை பிரிவின் தலைவரான டாக்டர். சித்தார்த்த புத்தவரப்பு "மருத்துவ அறிவியலின் வளர்ச்சியால் இன்று 24- 25 வார சிசுக்களையும் காப்பாற்றுவது சாத்தியமாகியுள்ளது" என்று கூறினார். சரியான முறையில் செயற்கை சுவாசம் அளித்தல், நோய் தொற்று கட்டுபாடு மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஏதுவான நெறிமுறைகளின் மூலமும் இக்குழந்தைகளை மூளை அழற்சி, உடல் செயல்பாட்டு குறைகளின்றியும் காப்பற்றலாம். இக்குழந்தைகளின் பராமரிப்பு மருத்துவமனையை விட்டு சென்ற பிறகும் முதல் சில ஆண்டுகளுக்கு தனி கவனத்துடன் இருக்க வேன்டும். மக்களிடமும், மருத்துவர்களிடமும் விழிப்புணர்வை அதிகரிக்கவே இந்நிகழ்ச்சி" என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், 1000 கிராம் குழந்தையாக இம்மருத்துவமனையில் பிறந்து இன்று வெற்றிகரமாக மருத்துவ படிப்பினை முடித்துள்ள மாணவி, 24 வாரதில் பிறந்து இன்று ஆரோக்கியதுடம் இருக்கும் இரட்டையரின் பெற்றோர் என பலரும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...